மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
வேலூர்: ஜோலார்பேட்டை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் சகோதரரிடம், 35 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீஸார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் வீரமணி. இவரது சகோதரரர் காமராஜ். இவர் ஜோலார்பேட்டையில் பீடி கம்பெனி, திருமண மண்டபம் வைத்துள்ளார். இவரிடம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேசன் மனைவி விஜயலட்சுமி என்பவர் மலேசியா வங்கியில், 10 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகவும், அதற்கு கமிஷனாக, 35 லட்சம் பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். வேலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒரு ஹோட்டலில் வைத்து காமராஜ், 35 லட்ச ரூபாயை விஜயலட்சுமியிடம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுச் சென்ற விஜயலட்சுமியிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. விஜயலட்சுமி கொடுத்த மொபைல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்ட போது, சுவிச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர் கொடுத்த, இ மெயில்களை ஆய்வு செய்து போது, அது போலியான முகவரி என்பது தெரிந்தது. இது குறித்து காமராஜ், வேலூர் நான்காவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோதி, இதன் மீது வழக்கு பதிவு செய்ய, வேலூர் வடக்கு குற்ற பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, இரு தனிப்படை அமைத்து, 35 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக, விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.
02-Oct-2025
02-Oct-2025