மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
வேலூர்: வாணியம்பாடி அருகே, நிலத்தை அபகரித்துக் கொண்டு, தம்பதியரை தாக்கிய, தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட ஐந்து பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே, 102 ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா (40). இவரது கணவன் புரு÷ஷாத்துமன் (45), அவர்கள் பெங்களூருவில் வசிக்கின்றனர். ரெட்டியூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தை அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் சாமிக்கண்ணு அபகரித்துக் கொண்டார். கடந்த ஆண்டு, அந்த நிலத்தை பிளாட் போட்டு விற்க திட்டமிட்டார். இதை அறிந்த புரு÷ஷாத்தமன் தம்பதியர், கலெக்டரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், 'ரெட்டியூருக்கு வந்தால் கொலை செய்து விடுவோம்' என, சாமிக்கண்ணு மிரட்டியதால், தம்பதியர் பெங்களூருவில் தங்கி விட்டனர். தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில், நில அபகரிப்பு தொடர்பாக தனிப்பிரிவு துவக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படுவதால், புரு÷ஷாத்தமன் மற்றும் விஜயா ஆகியோர் நேற்று முன் தினம், வாணியம்பாடி தாசில்தார் தங்கவேலிடம் நிலத்தை மீட்டுத் தரும்படி புகார் செய்தனர். நேற்று காலை, 9 மணிக்கு, நிலத்தை சீர் செய்ய டிராக்டரில் சென்ற விஜயா, புரு÷ஷாத்தமனை சாமிக்கண்ணு மற்றும் சீனன், விஸ்வநாதன் ஆகியோர் தாக்கினர். படுகாயமடைந்த இருவரும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். வாணியம்பாடி போலீஸார், சாமிக்கண்ணு உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
02-Oct-2025
02-Oct-2025