உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது

வேலுார்: வேலுார் அருகே, 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஆர்.எஸ்.,நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்து, 24; இவர் கடந்த, 29ம் தேதி, 5ம் வகுப்பு படிக்கும், 10 வயது மாணயிடம் ஆசை வார்த்தை கூறி அப்பகுதியிலுள்ள ஏரிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி அங்கிருந்து தப்பியோடி வந்து, பெற்றோரிடம் நடந்ததை கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் புகார் படி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், முத்துவை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை