உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்

வேலுார், 'மேகதாது அணை விவகாரம் குறித்து, கர்நாடக துணை முதல்வர், பிரதமர் மோடியை சந்தித்த போது, தமிழகத்துடன் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அவ்வாறு நாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இயலாது, அதை ஏற்று கொண்டால், நாம் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். கலெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடகாவும், தமிழகமும் மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை, 38 முறை பேசியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. பிரதமராக தேவுகவுடா இருந்தபோது, கர்நாடக முதல்வர் பட்டேலும், தமிழக முதல்வர் கருணாநிதியும் பேசியும் அப்போதே தீர்க்கப்படவில்லை. வி.பி.சிங், பிரதமராக இருந்தகாலத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் தமிழகம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர், பிரதமர் மோடியை சந்தித்தபோது, தமிழகத்துடன் பேசி தீர்த்து கெள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால், பேசினால் தீர்வு கிடைக்காது. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்பது, நாம் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள். அதற்கு நாம் நடுவர் மன்றம் கேட்டோம். ஆனால், அவர்கள் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
ஆக 03, 2024 19:39

"கர்நாடகாவும், தமிழகமும் மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை, 38 முறை பேசியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. பிரதமராக தேவுகவுடா இருந்தபோது, கர்நாடக முதல்வர் பட்டேலும், தமிழக முதல்வர் கருணாநிதியும் பேசியும் அப்போதே தீர்க்கப்படவில்லை" முன்பு பாஜக ஆட்சியில் இருந்தது ஆனால் இப்போது திமுகவின் நிரந்தரக் கூட்டாளியான காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவரை தூது விடலாம் அகில உலக அன்னை சோனியா மூலம் அழுத்தம் கொடுக்கலாமே. சாதிக்க முடியாவிடில் அவர்களைக் குறை கூற வாய்ப்பு கிடைக்கும் அவர்கள் அடிமைகளாகத் தொடர்வார்கள் மாநில சுயாட்சி வேண்டுமென்று போராடும் தமிழக அரசு தனது பிரச்சினையைக் கூட்டணி தலைவர்களிடம் கூடப் பேசித் தீர்க்கமுடியவில்லையென்றால் தனியாட்சி அமைத்து என்ன கிழிக்கப்போகிறார்கள்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை