மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர் மறியல்: 98 பேர் கைது
10-Dec-2025
வேலுார்:சென்னையில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநாடு, 2007 ஏப்., 16ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க அப்போதைய ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், மினி வேனில் புறப்பட்டனர். அரக்கோணம் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதி கோவிலுக்கு சென்ற போது, ஆளில்லாத ரயில் பாதையை கடக்க முயன்றனர்.அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் சென்ற பயணியர் ரயில், மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வி.ஏ.ஓ.,க்கள் செல்வாபண்டியன், தாண்டவராயன் உட்பட 9 பேர், வி.ஏ.ஓ., ராமமூர்த்தி மகன் பிரவீன்குமார், மினி வேன் டிரைவர் என, 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் படுகாயத்துடன் தப்பினர்.உயிரிழந்த 11 பேர் மற்றும் பலத்த காயமடைந்த ஒரு வி.ஏ.ஓ., என, 12 பேரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி, வேலுார் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 1 கோடியே, 44 லட்சத்து, 97 ஆயிரத்து, 551 ரூபாய் இழப்பீடு, அதற்கான வட்டி, வழக்கு செலவு ஆகியவை வழங்க நேற்று முன்தினம் மாலை, நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.இழப்பீடு தொகையை விபத்துக்குள்ளான மினி வேன் காப்பீடு நிறுவனமும், தெற்கு ரயில்வேயும் சமமாக பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
10-Dec-2025