உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / திருட்டு போன 250 மொபைல்போன்கள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு

திருட்டு போன 250 மொபைல்போன்கள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு

வேலுார்:வேலுார் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் திருட்டு போன, 250 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று உரியவர்களிடம் எஸ்.பி., மணிவண்ணன் ஒப்படைத்தார்.பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: வேலுார் மாவட்டத்தில் சமீபத்தில் திருட்டு போன, 250 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் வேலுார் மாவட்டத்தில் திருட்டு போன, ஒரு கோடியே, 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 922 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தினமும் கள்ளச்சாராய ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. வேலுார் மாவட்டத்தில், பழுதான கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 146 சிறுவர்கள் காணாமல் போனதில், 53 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ