உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / வீட்டு ஜன்னல் உடைத்து 30 சவரன் நகை திருட்டு

வீட்டு ஜன்னல் உடைத்து 30 சவரன் நகை திருட்டு

வேலுார்:வேலுார் அருகே, வீட்டின் ஜன்னலை உடைத்து, 30 சவரன் நகை மற்றும் 30,000 ரூபாய் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலுார் மாவட்டம், இந்திரா நகர் பெருமுகை பகுதியைச் சேர்ந்தவர் கோகுல், 37. இவரது மனைவி சங்கரி, 32. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டினுள் வைத்திருந்த, 30 சவரன் நகை மற்றும் 30,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.சத்துவாச்சாரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி