உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / பைக்கில் முகப்பு விளக்கு இன்றி சென்றதால் விபத்து: 2 பேர் பலி

பைக்கில் முகப்பு விளக்கு இன்றி சென்றதால் விபத்து: 2 பேர் பலி

வேலுார் : வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பல்லலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வாஞ்சிநாதன், 28. இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தன் பைக்கில் ஹெல்மெட் அணியாமலும், முகப்பு விளக்கு எரியாத நிலையிலும், பல்லலகுப்பத்தில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி சென்றார்.சொக்கரசிகுப்பம் அருகே, இருள் சூழ்ந்திருந்ததால் பாதை தெரியாத நிலையில் வாஞ்சிநாதன் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பலராமன், 23, என்பவர் மீது இவரின் பைக் மோதியது. இதில் பலராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். வாஞ்சிநாதன் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ