மேலும் செய்திகள்
பென்லேண்ட் மருத்துவமனையில் மருந்து வழங்க ஊழியரின்றி அவதி
14 hour(s) ago
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
பொன்னை:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில், தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை, 10ம் நுாற்றாண்டின் ராட்டிரகூடர் மன்னர், 3ம் கிருஷ்ண கன்னர தேவனின் கல்வெட்டுகள். அவற்றை மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் தலைமையிலான அதிகாரிகள், வேலுார் கோட்டையிலுள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்சென்று நேற்று ஆவணப்படுத்தினர்.இக்கல்வெட்டுகள் தமிழ், கன்னடம் மொழிகளில் உள்ளன. காஞ்சிபுரத்தில் நடந்த விகட சக்கரம் என்ற நிகழ்ச்சி குறித்தும், சோழ இளவரசன் ராஜாத்தியனை பற்றியும், இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டுள்ளன.
14 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025