உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மகளிடம் சீண்டல் போக்சோவில் தந்தை கைது

மகளிடம் சீண்டல் போக்சோவில் தந்தை கைது

வேலுார்:வேலுார் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, 32 வயது நபர் கட்டட கலை சிற்பியாக வேலை செய்து வருகிறார்.இவரது, 9 வயது மகள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். ஓராண்டாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தந்தை மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சிறுமி, தந்தையின் தொல்லை தாங்காமல், அவரது தாயிடம் கூறினார். இதைக்கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.வேலுார் அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் தாய் நேற்று கொடுத்த புகார்படி, போலீசார் விசாரித்து சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்