மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
வேலுார்:வேலுாரில், நிதி நிறுவன மோசடியால், விரக்தியடைந்த அந்நிறுவன ஏஜன்ட் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலுார் சத்துவாச்சாரி - 3 பகுதியைச் சேர்ந்தவர் முகிலன், 47; பழைய பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். மேலும், ஐ.எப்.எஸ்., நிதிநிறுவன ஏஜன்டாக இருந்து வந்தார். சத்துவாச்சாரி, ரங்காபுரம் உட்பட பல பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்திற்கு மூலதன பணம் பெற்றார். மோசடியில் சிக்கிய நிறுவனம், மூடப்பட்டதால், நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் முகிலனிடம் பணத்தை திரும்ப தரக்கேட்டு வந்தனர். இதனால், சில மாதங்களுக்கு முன் அவர் தலைமறைவானார்.குடும்பத்தினரை பார்க்க, இரு நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். இதையறிந்த, பணம் கொடுத்தவர்கள் இவரை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டனர். நேற்று முன்தினம், பழைய பொருட்கள் வாங்கி விற்கும் அலுவலகத்திற்கு செல்வதாக கூறி சென்ற முகிலன் வீடு திரும்பவில்லை.அவரது குடும்பத்தினர் தேடி சென்றபோது, அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய சத்தவாச்சாரி போலீசார், விசாரிக்கின்றனர்.
02-Oct-2025
02-Oct-2025