வேலுார் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வேலுார் மாவட்டம், மாநில அளவில் கடைசி இடம் பிடித்தது.வேலுார் மாவட்டத்தில், 9,104 மாணவர்கள், 9,253 மாணவியர் என மொத்தம், 18 ஆயிரத்து, 357 பேர் தேர்வு எழுதினர். இதில், 6,885 மாணவர்கள், 8,181 மாணவியர் என மொத்தம், 15 ஆயிரத்து, 66 பேர் தேர்ச்சி அடைந்தனர். வேலுார் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மிக குறைந்த தேர்ச்சியால், வேலுார் மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடமான, 38வது இடத்தை பிடித்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 7,634 மாணவர்கள், 7,540 மாணவியர் என மொத்தம், 15 ஆயிரத்து, 174 பேர் தேர்வு எழுதினர். இதில், 6,088 மாணவர்கள், 6,882 மாணவியர் என மொத்தம், 12 ஆயிரத்து 970 பேர் தேர்ச்சி பெற்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம், 85.48 சதவீதம். ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திற்கு முன்னதாக, 37 வது இடத்தை பிடித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 917 மாணவர்கள், 15 ஆயிரத்து, 17 மாணவியர் என மொத்தம், 30 ஆயிரத்து, 934 பேர் தேர்வு எழுதினர். இதில், 12 ஆயிரத்து, 936 மாணவர்கள், 13 ஆயிரத்து, 698 மாணவியர் என மொத்தம், 26 ஆயிரத்து, 634 பேர் தேர்வில் வெற்றி பெற்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், 86.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பொது தேர்வில், திருவண்ணாமலை மாவட்டம், 36வது இடத்தை பிடித்துள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில், 7,998 மாணவர்கள், 7,942 மாணவியர் என மொத்தம், 15 ஆயிரத்து, 939 பேர் தேர்வு எழுதினர். இதில், 6,782 மாணவர்கள், 7,276 மாணவியர் என மொத்தம், 14 ஆயிரத்து, 58 பேர் தேர்ச்சி பெற்றனர். திருப்பத்துார் மாவட்டத்தில், 88.20 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வில் திருப்பத்துார் மாநில அளவில், 31வது இடத்தை பிடித்துள்ளது.