உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கைதிகள் சென்ற வேன் மக்கர் போலீசார் தள்ளி சென்ற பரிதாபம்

கைதிகள் சென்ற வேன் மக்கர் போலீசார் தள்ளி சென்ற பரிதாபம்

ஆம்பூர்:வேலுார் மத்திய சிறைக் கைதிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் விசாரணைக்காக, திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணை முடிந்து நேற்று முன்தினம் மாலை, 7:00 மணியளவில் மீண்டும் சிறைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்த போது, திடீரென வேன் பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் செய்வதறியாது தவித்த போலீசார், பொதுமக்களை உதவிக்கு அழைத்தனர். பின், போலீசார், பொதுமக்களுடன் சேர்ந்து வேனை 500 மீட்டருக்கு மேல் தள்ளியவாறு சென்றனர். பின்னர், இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு, வேன் புறப்பட்டு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கைதிகளை அழைத்துச் செல்லும் வேனை கூட ‍போலீசார் முறையாக பராமரிப்பதில்லை என, பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி