உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / வேலுார் ஜி.ஹெச்.,சில் ஆண் குழந்தை கடத்தல்

வேலுார் ஜி.ஹெச்.,சில் ஆண் குழந்தை கடத்தல்

வேலுார்:வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 26. இவரது மனைவி சின்னி, 20. கடந்த, 27 ம் தேதி, பிரசவத்திற்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அன்று இரவு, ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் 28ம் தேதி காலை பிரசவ வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணி அளவில் இருவர், பிரசவ வார்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்திச் சென்றனர். சிறிது நேரத்தில் குழந்தையை காணாமல் திடுக்கிட்ட தாய் கதறி அழுதார். பின்னர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது, இருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. அடுக்கம்பாறை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி