உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / குழந்தைக்கு ஜெனடிக் டிசாஸ்டர் ரூ.16 கோடி மருந்துக்கு கண்ணீர்

குழந்தைக்கு ஜெனடிக் டிசாஸ்டர் ரூ.16 கோடி மருந்துக்கு கண்ணீர்

வேலுார்:வேலுார் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒடுகத்துார் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சிசவேணிமைந்தன் - மாலதி தம்பதி. இவர்களது மகன் லக்க்ஷன், 2. கடந்த ஓராண்டுக்கு முன் முன், குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், குழந்தைக்கு 'ஜெனடிக் டிசாஸ்டர்' வகையான எஸ்.எம்.ஏ., எனும், 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி' என்ற மிக அரிதான தசை நோய் இருப்பது தெரிந்தது. இதற்கான மருந்து வெளிநாட்டிலிருந்து வரவழைக்க வேண்டும். இதற்கு, 16 கோடி ரூபாய் செலவாகும் என டாக்டர்கள் கூறினர். குழந்தையின் தாய் மாலதி, மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமியை சந்தித்து, தன் குழந்தையை காப்பாற்ற, நடவடிக்கை கோரி மனு அளித்தார்.குழந்தையின் நிலை குறித்து பெற்றோர் கூறுகையில், 'அரிய வகை நோய் பாதித்த குழந்தையை பார்க்கும்போது மனம் வலிக்கிறது. ஒரே ஊசி, 16 கோடி ரூபாய் என்கிறார்கள். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. அப்படியே விட்டு விட்டால், நாளடைவில் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். மகனை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை