மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த துவண்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன், 40; வேலுாரில் தனியார் கல்குவாரி மேலாளர். இவர் அப்பகுதியில் உள்ள உறவினரது நிலத்தில் இருந்து கிராவல் மண் எடுக்க, குடியாத்தம் ஆர்.டி.ஓ., சுபலட்சுமியிடம் கடந்த பிப்., 22ல் மனு அளித்தார். அப்போது அனுமதி அளிக்க, 10,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த சுபலட்சுமி, குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றினர். வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், மோகன் வீட்டில், கடந்த, 8 ல் சோதனை நடத்தி பணம் மற்றும் கிராவல் மண் எடுக்க, அரசு முத்திரையுடன் கூடிய போலி ஆவணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார், மோகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Oct-2025
02-Oct-2025