மேலும் செய்திகள்
டில்லியில் இருந்தா சாப்பாடு வரும்?
26-Oct-2025
வேலுார் பொற்கோவிலில் அமைச்சர் யாகம்
26-Oct-2025
வேலுார் கோட்டை அகழி இடிந்து சேதம்
23-Oct-2025
பெண் குழந்தை கடத்தலில் 66 பேரிடம் விசாரணை
23-Oct-2025
ஆம்பூர் : ஆம்பூர் அருகே, 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 3 பேர் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் நகைப்பட்டறை நடத்தி வந்தவர் சரவணன், 44; இவரது மனைவி சாந்தி, 40; இவர்களது மகன் மைத்ரேயன், 19; இவர்கள், மாருதி ஈக்கோ காரில், தர்மபுரி சென்று விட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த அரிசினகெரே பகுதியை சேர்ந்த, டைல்ஸ் கடை நடத்தி வரும் மாதவன், 55; அவர் மனைவி ரோஜா, 50, கிராபிக் டிசைனரான மகன் சிவா, 32; மற்றொரு மகன் குமரேசன், 30, ஆகிய, 4 பேரும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். இதில், ரோஜா, சிவா டாடா சபாரி காரிலும், மாதவன், குமரேசன் ஆகியோர் மாருதி சுசுகி காரிலும் சென்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே, சிவா ஓட்டி சென்ற டாடா சபாரி கார் அதிவேகமாக சென்றதால், சாலை தடுப்பை உடைத்து கொண்டு, எதிரே தர்மபுரியிலிருந்து வந்து கொண்டிருந்த சரவணன் கார் மீது மோதியது. மேலும், சிவாவின் காரை பின்தொடர்ந்து வந்த மாதவன், குமரேசன் வந்த காரும், இந்த விபத்தில் சிக்கியது. இதில், ரோஜா, சிவா, சரவணன், ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சாந்தி, மைத்ரேயன், மாதவன், குமரேசன் ஆகிய, 4 பேர் படுகாயமடைந்து, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து, ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Oct-2025
26-Oct-2025
23-Oct-2025
23-Oct-2025