| ADDED : ஜூலை 20, 2024 05:55 PM
வேலுார் : ''அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.இதுகுறித்து வேலுாரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக, அங்கு இங்கு என இல்லாமல், எங்கும் செய்தி ஒலிக்கிறது. அதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். உதயநிதி முறையாக கட்சியில் வளர்ந்தவர், கட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர். என்னுடைய தனிப்பட்ட மரியாதையை விட, கட்சி நோக்கம், பலம், அதையெல்லாம் நான் எதிர்பார்ப்பவன். கட்சி வளர்ச்சிக்காகவே என்னை அர்ப்பணித்தவன் நான். என் வளர்ச்சி, என் குடும்ப நிகழ்ச்சிகளை விட, கட்சியை பெரிதாக நினைப்பவன் நான். இவ்வாறு அவர் கூறினார்.