மேலும் செய்திகள்
பென்லேண்ட் மருத்துவமனையில் மருந்து வழங்க ஊழியரின்றி அவதி
13 hour(s) ago
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
வேலுார் : வேலுாரில், வாடகை பாக்கி வைத்துள்ள மாநகராட்சி கடைகளுக்கு, ஊழியர்கள் நேற்று 'சீல்' வைத்தனர். வேலுார் மாநகராட்சிக்கு சொந்தமாக சாரதி மாளிகை, பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம், புதிய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நடப்பு நிதியாண்டு, 2023-24 மார்ச் மாதம் முடிய உள்ள நிலையில், பல கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி கமிஷனர் ஜானகி உத்தரவின்படி, வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம், மாநகராட்சி உதவி ஆணையர் சசிகலா தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முதல் கட்டமாக, 12 கடைகளுக்கு சீல் வைத்தனர்.அந்த கடைகள் வாடகை செலுத்த, கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பணம் கட்டவில்லை என்றால், மறு டெண்டர் விடப்பட்டு வேறு நபருக்கு கடை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். -
13 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025