உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / குடும்பத்தினரை எரிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

குடும்பத்தினரை எரிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

வேலுார்:வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 49, முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சுகந்தி, 42. இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறால் கணவரை பிரிந்து, சுகந்தி குழந்தைகளுடன், அதே கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வசிக்கிறார்.இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், தட்சணாமூர்த்தி குழந்தைகளை பார்க்க அவ்வப்போது மாமியார் வீட்டிற்கு வந்து செல்வார்.நேற்று முன்தினம் அவர் குழந்தைகளை பார்க்க மது போதையில் சென்றார். அப்போது, தட்சணாமூர்த்திக்கும், சுகந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை மாமியார் குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயன்றனர்.அதை ஏற்காமல், மனைவி, இரு குழந்தைகள், மாமியாரை வீட்டின் உள்ளே வைத்து வெளிப்பக்கமாக பூட்டிய தட்சணாமூர்த்தி, வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார்.அதிர்ச்சியடைந்த சுகந்தியின் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்தபோது, தட்சிணாமூர்த்தி அங்கிருந்து தப்பினார். கே.வி.குப்பம் போலீசார், தட்சணாமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை