மேலும் செய்திகள்
குழந்தை தொழிலாளர் மின்சாரம் பாய்ந்து பலி
36 minutes ago
ஒடுகத்துார்: வேலுார் அருகே, 17 வயது சிறுமியை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால், உறவினர்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வேலுார் மாவட்டம், பாக்கம்பாளையம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்து, மானை வேட்டையாடி வீட்டில் சமைப்பதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பாக்கம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த், 29, வீட்டில் சோதனையிட்டனர். அவரது வீட்டில் இறந்த மானின் தலை, கால்கள், உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை கைப்பற்றி, ஆனந்தை கைது செய்து, ஒடுகத்துார் வன அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அதேபோல, ஆனந்தின் பக்கத்து வீட்டில் இருந்த, 17 வயது சிறுமியை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். சிறுமியின் உறவினர்கள், வனச்சரக அலுவலகத்தில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறுமி அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
36 minutes ago