உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / நண்பனை கொன்ற வாலிபருக்கு ஆயுள்

நண்பனை கொன்ற வாலிபருக்கு ஆயுள்

வேலுார் : நண்பனை கொன்ற வாலிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, வேலுார் நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலுார் மாவட்டம், சேண்பாக்கத்தை சேர்ந்தவர் அஜீத்குமார், 24; இவரது நண்பர் சுகுமார், 26; அஜீத்குமார், திருநங்கையுடன் சுற்றி திரிந்து வந்தார். இதை சுகுமார், கேலியும் கிண்டலும் செய்து வந்தார். இதேபோன்று, கடந்த, 2021 ஏப்., 12ம் தேதி, கேலி செய்தபோது, ஆத்திரமடைந்த அஜீத்குமார், நண்பர் சுகுமாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். வேலுார் வடக்கு போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு, வேலுார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சாந்தி, நண்பரை கொன்ற அஜீத்குமாருக்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், கொலை செய்யும் எண்ணத்தில் தாக்கியதற்கு ஓராண்டு சிறை, 500 ரூபாய் அபராதம் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை