மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
வேலுார்: பேரணாம்பட்டு அருகே, இரவு நேரத்தில் சாலையை சிறுத்தை கடந்து சென்ற வீடியோ வைரலாகி வருவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு, குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டி ஆந்திர மாநிலம், கவுண்டன்யா வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள், சிறுத்தை, குள்ளநரி, காட்டுப்பன்றி, மான்கள் கூட்டமாக நடமாடி வருகின்றன. இதில் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா, பாஸ்மர்பெண்டா, சாரங்கல், பத்தலப்பல்லி, கோட்டையூர், எருக்கம்பட்டு, குண்டலப்பல்லி, உள்ளிட்ட கிராமங்களை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளன.இங்குள்ள விலங்குகள், தண்ணீர் தேடி கிராமங்களில் புகுந்து விடுகிறது. இந்நிலையில், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு, சாவகாசமாக சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதை வாகன ஓட்டிகள், மொபைல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலை தளங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு பரப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
02-Oct-2025
02-Oct-2025