உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கலெக்டர் ஆபீசில் மின்தடை; லிப்ட்டில் தவித்த 8 பேர்

கலெக்டர் ஆபீசில் மின்தடை; லிப்ட்டில் தவித்த 8 பேர்

வேலுார் : வேலுார் கலெக்டர் அலுவலக அறைகளுக்கு மின்சாரம் வினியோகிக்க, அதன் வளாகத்திலேயே தனியே மின்மாற்றி, ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அதிக வெப்பத்தால் அனைத்து துறை அதிகாரிகளும் பேன், 'ஏசி'க்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். நேற்று மின்மாற்றியில், 'ஓவர் லோடு' ஏற்பட, தீப்பிடித்து எரிந்து மின்தடை ஏற்பட்டது. இதனால், கலெக்டர் அலுவலக, 'லிப்ட்' நின்றது. அதில், 8 பேர் சிக்கியிருந்தனர்.எரிந்த ஒயரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாய்ந்து, பொதுப்பணித்துறை எலக்ட்ரீஷியன் சந்தோஷ் காயம் அடைந்தார். தொடர்ந்து அவர் வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், 8 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் தடைபட்ட மின்சாரத்தை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் சீரான நிலைக்கு கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி