மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
குடியாத்தம்:தமிழகம் முழுதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை நாட்களானது. இதனால், பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள 20 ஏ.டி.எம்., மையங்களிலும் பணம் முழுதும் தீர்ந்த நிலையில், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். இதை பயன்படுத்தி கொண்ட அப்பகுதி வியாபாரிகள், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், 1,000 ரூபாய்க்கு, 20 ரூபாய் கமிஷன் பெற்று, பொதுமக்களுக்கு பணம் வழங்கினர். இதுபோல, பல லட்சம் ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. நேற்று முன் தினம் காலை வங்கி திறக்கப்பட்டதும், மதியம் முதல் நிலைமை சீரடைந்து பொதுமக்கள் வங்கிக்கு சென்று பணம் எடுத்தனர்.மேலும், ஏ.டி.எம்., இயந்திரங்களிலும், பணம் நிரப்பப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
02-Oct-2025
02-Oct-2025