| ADDED : ஜன 19, 2024 11:23 PM
காட்பாடி:வேலுார் மாவட்டம், காட்பாடி, கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்தவர் வசந்தி, 40. கடந்த, 10ம் தேதி பணி முடிந்து ராணிப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு காரில் புறப்பட்ட வசந்தியை லஞ்ச ஒழிப்பு போலீசார் பின் தொடர்ந்து சென்று காரை வழிமறித்து சோதனை செய்ததில், மூன்று லட்சம் ரூபாய் இருந்தது. அவரது வீட்டுக்கும் சென்று சோதனை செய்தனர். மொத்தம், 6.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதில், வசந்தி முறைகேடாக பணம் பெற்றது தெரிந்தது.இதையடுத்து, வசந்தியை சஸ்பெண்ட் செய்து, போக்குவரத்து ஆணையர் நேற்று உத்தரவிட்டார்.