உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / பொங்கல் விழா விளையாட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி

பொங்கல் விழா விளையாட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி

வேலுார்: வேலுார் அருகே, அரசு பள்ளியில் நடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட, விளையாட்டு போட்டியில், பங்கேற்ற மாணவி மயங்கி விழுந்து இறந்தார். வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தை சேர்ந்தவர் பெயின்டர் சுதாகர், 40. இவரது மகள் யோகேஸ்வரி, 7, கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில், நேற்று முன்தினம் மாலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டி நடந்தது. இதில் யோகேஸ்வரி, பிளாஸ்டிக் பந்து போட்டியில் விளையாடியபோது மயங்கி விழுந்தார்.மகள் விளையாடியதை சுதாகர் பார்த்து கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த, 1ம் தேதி முதல் மருந்து எதுவும் யோகேஸ்வரி எடுக்கவில்லை என சுதாகர் கூறினார்.விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை