உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ரயில் தண்டவாளத்தில் சட்டம் உடைந்தது சரக்கு ரயில் தப்பியது

ரயில் தண்டவாளத்தில் சட்டம் உடைந்தது சரக்கு ரயில் தப்பியது

வேலூர்: அரக்கோணம் அருகே ரயில் தண்டவாள சட்டம் உடைந்தது. உடனடியாக தெரிந்ததால், சரக்கு ரயில் விபத்தில் இருந்து தப்பியது.சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயில் நேற்று அரக்கோணம் வழியாக ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா நோக்கி சென்றது. காலை 6.30 மணிக்கு அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூர் அருகே சிக்னலுக்காக சிறிது நேரம் நின்ற ரயில், மீண்டும் புறப்பட்ட போது, திடீரென ரயில் தண்டவாளத்தை இணைக்கும் இரும்பு சட்டம் உடைந்தது.இதனால் எழுந்த சத்தத்தை கேட்டு ரயில் இன்ஜின் டிரைவர் கோவிந்தராஜன் நிறுத்தினார். தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பால்ராஜ் தலைமையில், 25 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாள இணைப்பில் உடைந்த இரும்பு சட்டங்களை மாற்றி, 7.30 மணியளவில் சரி செய்தனர்.இதையடுத்து சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள், 1. 30 மணி நேரம் தாமதமாக சென்றது.சரக்கு ரயில் டிரைவர் சமயோசிதமாக ரயிலை நிறுத்தி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை