உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊராட்சி தலைவருக்கான மனு தள்ளுபடி: கிராம மக்கள் மறியல்

ஊராட்சி தலைவருக்கான மனு தள்ளுபடி: கிராம மக்கள் மறியல்

செஞ்சி : வல்லம் அருகே ஊராட்சி தலைவருக்கான மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் சோழங்குணம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சரவணன், ராமன், ஏழுமலை, முருகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதில் முருகன் மனுவை வாபஸ் பெற்றார். ராமன் என்பவருக்கு சென்னையில் ஓட்டு இருப்பதாக சரவணன் தரப்பில் புகார் கூறினர். சென்னையில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய மனு செய்துள்ளதாகவும், வேறு எங்கும் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் ராமன் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். ஆனால் ராமன் மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இது குறித்து ராமன் தேர்தல் ஆணையத்திடம் நேரில் புகார் தெரிவித்தார். அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுக்குமாறு ஆலோசனை கூறினர். இந்நிலையில் நேற்று இப்பிரசனையை கண்டித்து சோழங்குணம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் வேன்களில் வல்லம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சோழக்குணத்தில் இருந்த வந்த வேன்களை பென்னகர் மற்றும் இல்லோடு கிராமத்தில் தடுத்து நிறுத்தினர். இல்லோடு கிராமத்தில் தடுத்து நிறுத்தியதும், வேனில் வந்தவர்கள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து வல்லம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், பிரச்னை குறித்து கோர்ட்டு மூலம் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ