உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு மாநில பொருளாளர் பிரசாரம்

ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு மாநில பொருளாளர் பிரசாரம்

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர் இஸ்மாயிலுக்கு ஆதரவாக மாநில பொருளாளர் பிரசாரம் செய்தார்.திண்டிவனம் நகராட்சியில் ம.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கு ஆதரவாக மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி பிரசாரம் செய்தார். நேற்று 25வது வார்டு பூதேரி பகுதியில் வேட்பாளர் இஸ்மாயிலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். புதுச்சேரி மாநில துணை அமைப்பாளர் ஹேமா பாண்டுரங்கன், அவைத் தலைவர் திருவேங்கிடம், திருஞானம், கிளை நிர்வாகிகள் ராமச்சந்திரன், சுப்ரமணி, குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை