உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை

போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம், : விழுப்புரத்தில் பட்டப்பகலில் போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், வழுதரெட்டி, பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் முரளிதரன்,55; பாவந்துார் கிராமத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி மாலதி,50; சித்தானங்கூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்.இருவரும் நேற்று காலை 9:30 மணிக்கு வீட்டை பூட்டி கொண்டு பணிக்குச் சென்றனர். மதியம் 2:00 மணியளவில் மாலதி வீட்டிற்கு வநதபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், ெஹல்மெட் அணிந்த மர்ம நபர் வீட்டிற்குள் சென்றது தெரிய வந்தது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி