உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆர்டரின் பேரில் 27 பைக்குகள் திருட்டு டி.வி.நல்லுாரில் 3 பேர் கைது

ஆர்டரின் பேரில் 27 பைக்குகள் திருட்டு டி.வி.நல்லுாரில் 3 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பைக் திருடிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏனாதிமங்கலம் - கரடிப்பாக்கம் பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு, பைக்குகளை ஆற்று ஓரமாக நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். அவ்வாறு ஆற்றோரத்தில் நிறுத்தப்படும் பைக்குகள் தொடர்ந்து திருடு போயின.இதுகுறித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி., சுரேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பாலசிங்கம் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு திருவெண்ணெய்நல்லுார் கள்ளுக்கடை சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் திரும்பிச் செல்ல முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.அதில் அவர்கள், கடலுார் மாவட்டம், பண்ருட்டி குச்சிபாளையம் குணசேகர் மகன் சிவா(எ) நல்லசிவம், 22; மேல்காவனுார் காத்தவராயன் மகன் அருண்,21; என்பதும், இருவரும் விழுப்புரம், வளவனுார், திருநாவலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைக்ககளை திருடி, விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் ஏழுமலை மகன் முத்துகுமார்,35; என்பவரிடம் கொடுப்பதும், அவர் பைக்கிற்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுத்ததும், மேலும், அவர் பைக் கேட்கும் போதெல்லாம் இருவரும் பைக் திருடி கொடுத்து வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிவா(எ) நல்லசிவம்,22; அருண்,21; மற்றும் முத்துகுமார்,35; ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் 27 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்த மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை