உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயியிடம் ரூ.6.80 லட்சம் மோசடி

விவசாயியிடம் ரூ.6.80 லட்சம் மோசடி

விழுப்புரம் : விவசாயியிடம் ஆன்லைனில் ரூ.6.80 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.திண்டிவனம் அடுத்த டி.பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் மகன் ரமேஷ்,29; விவசாயி. இவரை கடந்த 12ம் தேதி மொபைல் போனில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் அனுப்பும் யூ-டியூப் லிங்கிற்குள் பைவ் ஸ்டார் ரேட்டிங் தந்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என கூறினார். அதனை நம்பி ரமேஷ், மர்ம நபர் கூறியபடி செய்து ரூ.1,550 பெற்றார்.பின்னர், ரமேஷை தொடர்பு கொண்ட மர்ம நபர் சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி ஒரு லிங்கை அனுப்பினார். அந்த லிங்கிற்குள் சென்ற ரமேஷ், தனக்கென யூசர் ஐ.டி., பாஸ்வேர்ட் உருவாக்கிய பின், ஜி-பே, போன்-பே மூல் கடந்த 15, 16ம் தேதிகளில் பல்வேறு தவணைகளாக 6 லட்சத்து 80 ஆயிரத்து 480 ரூபாய் அனுப்பி, டாஸ்க் முடித்தார். ஆனால், அவருக்கு சேர வேண்டிய பணம் வரவில்லை.இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்