உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாராயம், கஞ்சா விற்ற 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

சாராயம், கஞ்சா விற்ற 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

மரக்காணம், : கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சாராய வியாபாரிகளை மரக்காணம் போலீசார் கைது செய்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சியில் கடந்த 18ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாராய வியாபாரிகள் குறித்த விபரங்களை தோண்டியெடுத்து அவரகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 5 லிட்டர் முதல் 25 லிட்டர் வரை சாராயத்தை பறிமுதல் செய்ததாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், சில தினங்களாக மரக்காணம் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட முன்னாள் சாராய வியாபாரிகளை கைது செய்துள்ளனர். நேற்று மரக்காணத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி வசந்தா, 40; குணசீலன் மனைவி சத்யா, 30; கணபதி மனைவி பாக்கியலட்சுமி, 40; பாலு மனைவி வனமயில், 50; கண்ணன் மகன் ரவிச்சந்திரன், 57; வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சீதாராமன், 34; ஆகிய 6 பேர் கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்தனர்.மேலும், மரக்காணத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜித்குமார், 26; கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை