மேலும் செய்திகள்
தலை மறைவு குற்றவாளி கைது
21 minutes ago
வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்
53 minutes ago
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
53 minutes ago
வானூர் : கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோத தகராறில், வீட்டு வாசலில் நாட்டு பட்டாசை கொளுத்தி வீசிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.வானூர் அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள மன்னார்சாமி கோவிலின் திருவிழா நடந்து வருகின்றது. நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள வாழ்முனி சுவாமி கழுத்தில் பெரிய வடை மாலை சாற்றப்பட்டு இருந்துள்ளது. பின், வடை மாலையை பொது மக்கள் மீது வீசியுள்ளனர். அப்போது குப்பன் மகன் ராமு என்ற சிறுவன், வீசிய வடை, அதே கிராமத்தை சேர்ந்த தேவநாதன் மகன் தனுசு, 37; என்பவர் மீது விழுந்துள்ளது. இதனை தனுசு தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராமு தனது அண்ணன் ஆகாஷ், 20; என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆகாஷ், அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ், 20; ஆகியோர் சென்று, தனுசுவிடம் தகராறு செய்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2;00 மணிக்கு, சத்தியராஜ், ஆகாஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்று, பாலித்தீன் பையில் துணி மற்றும் நாட்டு பட்டாசுகளை வைத்து, கொளுத்தி தனுசுவின் வீட்டின் மீது வீசியுள்ளனர். பட்டாசு தனுசுவின் அண்ணன் முருகன் என்பவரின் வீட்டு வாசலில் விழுந்து வெடித்துள்ளது. இந்த பட்டாசு வெடி சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அச்சத்துடன் எழுந்து பார்த்தபோது, இருவரும் பைக்கில் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தனுசு கொடுத்த புகாரின் பேரில் வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நாட்டு பட்டாசை கொளுத்தி வீசிய சத்தியராஜ், ஆகாஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
21 minutes ago
53 minutes ago
53 minutes ago