உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாடியிலிருந்து விழுந்த கூலித் தொழிலாளி பலி

மாடியிலிருந்து விழுந்த கூலித் தொழிலாளி பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி இறந்தார்.வளவனுார் அடுத்த ஆலயாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் அன்புச்செல்வன், 32; கூலித் தொழிலாளி. திருமணமாகதவர். இவருக்கு, வலிப்பு நோய் இருந்துள்ளது.கடந்த 1ம் தேதி இரவு, அவர் பக்கத்து வீட்டு மாடியில் படுத்து துாங்கியபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு, மாடியில் இருந்து விழுந்தார். தலையில் படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று இறந்தார்.வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்