உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாஸ்மாக் கடையில் புகுந்த சாரை பாம்பு

டாஸ்மாக் கடையில் புகுந்த சாரை பாம்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த சாரை பாம்பை தீயைணப்பு வீரர்கள் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.விக்கிரவாண்டி அடுத்த பேரணி டாஸ்மாக் கடையை நேற்று விற்பனையாளர்கள் விஸ்வநாதன்,பூபாலன் ஆகியோர் திறந்தனர். அப்போது 8 அடி நீளமுள்ள பெரிய சாரை பாம்பு மது பாட்டில்கள் இருக்கும் அட்டை பெட்டிகளுக்கிடையே புகுந்தது.தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலையத்தினர் ஒரு மணிநேரம் போராடி பாம்பை பிடித்து காப்புக் காட்டிற்குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை