உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கழிவுநீரால் தகராறு வாலிபர் கைது

கழிவுநீரால் தகராறு வாலிபர் கைது

விழுப்புரம், : காணை அருகே கழிவுநீர் பிரச்னையில் ஒருவரைத் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.காணை அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கையன், 54; எதிர் வீட்டைச் சேர்ந்தவர் சேகர் மகன் சபரி, 26; உறவினர். இவரது வீட்டு கழிவுநீரை சாலையில் விட்டுள்ளார்.இதை வேங்கையன் கடந்த 26ம் தேதி சபரியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சபரி, வேங்கையனை தாக்கினார். தடுத்த வேங்கையனின் தங்கை சண்முகவள்ளி, 45; என்பவரையும் தாக்கினார்.புகாரின் பேரில், காணை போலீசார் சபரி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ