உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காதலித்து மறுத்தவரை கரம் பிடித்த பெண்

காதலித்து மறுத்தவரை கரம் பிடித்த பெண்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே காதலித்து கைவிட்ட நபரை போலீசில் புகார் அளித்து, பெண் திருமணம் செய்து கொண்டார்.திண்டிவனம் அடுத்த ஆண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ், 22; இவருடைய பாட்டி வீடு, திண்டிவனம் அடுத்த பொலாக்குப்பத்தில் உள்ளது. பாட்டி வீட்டிற்கு வரும் போது, அதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் படித்து வரும் மாணவி யுவராணி, 19; என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினர். காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யுவராணி கேட்டபோது, அருள்பிரகாஷ் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த 2 நாட்களுக்கு முன் யுவராணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து ரோஷணை போலீசார் விசாரித்த போது, காதல் விவகாரம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, யுவராணி திண்டிவனம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரு தரப்பையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானமாகி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு நேற்று மாலை, காவல் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில், முறைப்படி இரு வீட்டார் உறவினர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !