| ADDED : மே 06, 2024 05:08 AM
செஞ்சி : செஞ்சி அருகே பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அ.தி.மு.க., நிர்வாகி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வல்லம் அடுத்த ஏதாநெமிலியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் லோகநாதன், 30; வல்லம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளராக பதவி வகித்து வந்தார்.இவர், தனது தாய், தந்தையுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் ஊர் திருவிழாவிற்காக லோகநாதன் மட்டும் ஏதா நெமிலி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.நேற்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் கிராம மக்கள் செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த போலீசார் கதவை திறந்து பார்த்த போது லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதையடுத்து லோகநாதன் உடலை பிரேத பரிசோதனக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து அவரது தந்தை காத்தவராயன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து தனிமையில் இருந்த லோகநாதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.