உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சங்கீதமங்கலம் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு தினம்

சங்கீதமங்கலம் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு தினம்

செஞ்சி: சங்கீதமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் அனந்தபுரம் காவல் நிலையம் இணைந்து சங்கீதமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின் முன்னிலை வகித்தார். போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், இளைஞர்களின் எதிர்காலமும், உடல் நலனும் கெடுவது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் விளக்கி பேசினார்.மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இந் நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை