உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போன்நேரு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு தின நிகழ்ச்சி

போன்நேரு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு தின நிகழ்ச்சி

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் போன்நேரு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு தினவிழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் ஆகியோர் பங்கேற்று போதை பொருட்களின் தீமைகளை பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறினர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் சப் இன்ஸ்பெக்டர் (பயிற்சி) வரலட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை