உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி வாடகை பணத்தை  கேட்டவர் மீது தாக்குதல்

லாரி வாடகை பணத்தை  கேட்டவர் மீது தாக்குதல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரி வாடகை பணம் கேட்டவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் தாலுகா ராமானுஜபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராஜா, 38; கட்டட தொழிலாளி. இவர், தனது டிப்பர் லாரியை, விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த குமார்,36; என்பவருக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு, மாத வாடகை 30 ஆயிரம் ரூபாய் என பேசி, லீசுக்கு கொடுத்துள்ளார். 2 மாதங்கள் மட்டுமே வாடகையை வாங்கியுள்ளார்.அதன்பிறகு வாடகை தராமல் ஏமாற்றிய குமாரிடம், 2 தினங்களுக்கு முன் ராஜா, வாடகையை கொடு அல்லது லாரியை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், ராஜாவை தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், குமார் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை