உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆத்மா திட்ட பயிற்சி முகாம்

ஆத்மா திட்ட பயிற்சி முகாம்

செஞ்சி : திருவம்பட்டு கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வல்லம் வட்டார வேளாண் துறை சார்பில், பயறு வகைகளில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தலைப்பில் நடந்த முகாமிற்கு, வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திர போஸ், உதவி வேளாண் அலுவலர் செண்பகவள்ளி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாலாஜி, ஜெயந்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பம், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம், பயறு வகைகள் கொள்முதல் மற்றும் இ-சம்ரிதி வலைதள பதிவேற்றம், பிரதமரின் கவுரவ ஊக்கத் தொகை திட்டம் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நேரடி நெல் விதைப்பு இயந்திரம், காய்கறி குழித்தட்டுகள் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் முருகன் மற்றும் முன்னோடி விவகாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி