உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, பிள்ளைகளுடன் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த சின்ன கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 35; தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி சங்கரி, 30; இவர், நேற்று காலை தனது மகன் தீஷிதன், 4; மகள் தர்ஷினி, 8; ஆகியோருடன், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.அப்போது திடீரென, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடன் அங்கிருந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது சங்கரி போலீசாரிடம் கூறுகையில், 'விழுப்புரம், ஆனந்தம் நகரில், கடந்தாண்டு மே மாதம், 15,000 ரூபாய் அட்வான்ஸ், 4000 ரூபாய் மாத வாடகை பேசி குடிபுகுந்தோம்.போதிய குடிநீர் வழங்காமல், வீட்டின் உரிமையாளர் பிரச்னை செய்து வந்தார். இதனால், நாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என கூறியதற்கு, வீட்டின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தார். இதனால், நாங்கள் வீட்டை பூட்டிக் கொண்டு எங்கள் கிராமத்துக்கு சென்று விட்டோம்.சில நாட்கள் கழித்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் பலவற்றை எடுத்து, வீட்டின் உரிமையாளர், விழுப்புரம் - திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு விற்கப்பட்டிருந்தது தெரியவந்தது.மேலும், அட்வான்ஸ் தொகை 15 ஆயிரம் ரூபாயையும் தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கடந்த 4 மாதங்களாக மன உளைச்சலில் இருக்கிறோம்' என்றார்.இதையடுத்து, போலீசார், சங்கரியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை