உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் காங்.,கூட்டம் மாநில தலைவர் பங்கேற்பு

விழுப்புரத்தில் காங்.,கூட்டம் மாநில தலைவர் பங்கேற்பு

விழுப்புரம் : தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வரும் 13ம் தேதி விழுப்புரம் வருகிறார்.விழுப்புரம் மத்திய மற் றும் வடக்கு மாவட்ட காங்., செயல்வீரர்கள் கூட்டம் வரும் 9ம் தேதி, விழுப்புரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், கூட்ட நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு, வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரை ஆற்றவுள்ளார். தமிழக காங்., சட்டசபை உறுப்பினர்கள் குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., கடலுார் எம்.பி., டாக்டர் விஷ்ணுபிரசாத், முன்னாள் எம்.பி., ராணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் சீனுவாசகுமார், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை