உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, நகை பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் கோபி மனைவி ராணி, 65; இவர், கடந்த 10ம் தேதி, உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ