உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டுப்போன மரம் அகற்றப்படுமா? 

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா? 

திண்டிவனம்: கர்ணாவூர் மெயின்ரோட்டில் மின் கம்பிகளுக்கு அருகே, விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை, கர்ணாவூர், மெயின்ரோட்டில், பட்டுப்போன புளிய மரம் நீண்ட நாட்களாக உள்ளது. பலமான காற்று வீசினால், இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.தற்போது மழை, காற்று அதிகம் வீசி வரும் நேரத்தில் மரம் சாய்ந்தால், அருகிலும் மின் கம்பிகள் மேல் விழும் நிலை உள்ளது. மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என, பஞ்சாயத்து தலைவர், மின்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் என அனைத்திற்கும் பொது மக்கள் புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விபத்து ஏற்படுவதற்குள் பட்டுப்போன மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை