உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.1 கோடி பணத்துடன் கார் பறிமுதல்; விழுப்புரம் அருகே போலீசார் அதிரடி

ரூ.1 கோடி பணத்துடன் கார் பறிமுதல்; விழுப்புரம் அருகே போலீசார் அதிரடி

விக்கிரவாண்டி : விழுப்புரம் அருகே காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் அடுத்த மழவந்தாங்கல் சோதனைச் சாவடியில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.மாலை 4:00 மணி அளவில் விழுப்புரம் நோக்கி வந்த டிஎன்.10-பியூ.8118 பதிவெண் கொண்ட டொயட்டோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 ட்ராலி பேக்குகளில் கட்டு கட்டாக ரூ.1 கோடி பணம் அடுக்கி வைத்திருந்தது.இதுகுறித்த காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் மதனகோபால், 48; கோவையில் அவரது தந்தை பழனியப்பனுக்கு சொந்தமான இடத்தை ரூ.1.10 கோடிக்கு விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தை எடுத்து வருவதாக கூறி, அதற்கான ஆவணங்களை காட்டினார்.இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார், இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், காரில் இருந்த பணத்தை கைப்பற்றி, விழுப்புரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இப்பணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
ஜூன் 29, 2024 13:16

கண்டிப்பாக எவனோ போட்டு கொடுத்துவிட்டான் இல்லேன்னா இப்படி நடப்பது சாத்தியமில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை