உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு தரப்பு தகராறு 10 பேர் மீது வழக்கு

இரு தரப்பு தகராறு 10 பேர் மீது வழக்கு

விழுப்புரம்,: காணை அருகே இரு தரப்பினர் பிரச்னையில் 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.காணை அருகே சென்னகுணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மஞ்சுளா,46; இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், இவர் மனைவி தமிழரசி, ராஜேந்திரன், ராதிகா ஆகியோர் இடையே அங்கு பொதுவாகவுள்ள பெரியாண்டவர் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக பிரச்னை உள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே வாய்தகராறு ஏற்பட்டதில், ஆறுமுகம் உட்பட நால்வரும் சேர்ந்து, மஞ்சுளா, இவரின் தாய் வேதவள்ளியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து, அமுதா தரப்பினர், அவர்களை தாக்கியுள்ளனர். இரு தரப்பு புகார்களின் பேரில், காணை போலீசார் ஆறுமுகம், தமிழரசி, பிரபாகரன், கமல் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை